அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும் போது பிரதேசத்தின் அனைத்து தரப்பினரதும் ஆலோசனைகள் பெறப்படுவது அவசியம் – ஈ.பி.டி.பியின் வலி கிழக்கு நிர்வாக செயலாளர் ஐங்கரன் வலியுறுத்து!

Friday, February 26th, 2021

பிரதேசத்தின் அபிவிருத்தியை முன்னெடுக்கும்போது அப்பிரதேசத்தின் அனைத்து துறை சார் தரப்பினரதும் பொதுமக்களினதும் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்று முன்னெடுப்பதற்கு துறைசார் அதிகாரிகள் கவனம் செலுத்துவதனூடாகவே மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் மக்களின் நலன்கருதியதாக அமையும் என ஈழ மக்கள் ஜனநாயக்க கட்சியின் வலிகாமம் கிழக்கு பிரதேச நிர்வாக செயலாளரும் குறித்த பிரதேசத்தின் பிரதேச சபை உறுப்பினருமான இராமநாதன் ஐரங்கரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

கடந்த 5 வருடங்களுக்கு பின்னர் சில அபிவிருத்தித் திட்டங்கள் எமது வலிகாமம் கிழக்கு பிரதேசத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

இத் திட்டங்களை நடைமுறைப் படுத்தப்படும் போது வாழும் மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துகளை பெற்றுக்கொண்டு. திட்டங்களை முன்னெடுப்பதனூடாகத்தான் அது ஒரு சிறந்த திட்டமாகவும் நீண்டகால அபிவிருத்தியாகவு அமையும்.

குறிப்பாக வீதி அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும் போது அவ்வீதியில் வசிக்கும் மக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவேண்டும் என சுட்டிக்காட்டிய ஐங்கரன் கிராம சேவையாளர்கள், பொது சுகாதார உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடி குறித்த அபிவிருத்தி பணியை முன்னெடுத்தால் அவ் அபிவிருத்தி அமைக்கப்படவதற்கான நோக்கம் சரியானதாக அமையும். ஒப்பந்ததாரர்களும் அத்திட்டத்தை சீராக அமைப்பதற்கு வழிவகையும் இதனூடாக உருவாக்கப்படும்.

அத்துடன் இவற்ற  கண்காணிப்பதற்கு அப்பிரதேச மக்களும் அப் பிரதேச உத்தியோகத்தர்களும் முயற்சி எடுக்கவேண்டும் என்பதுடன் வீதி அகலிப்பின்போது மின்கம்பங்கள் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாத வகையில் இடமாற்றி நாட்டப்படுவதும் அவசியமானதாக இருக்கின்றது எனவும் சட்டிக்காட்டிய இராமநாதன் ஐங்கரன் இவ்வாறான விடயங்களில் துறைசார் அதிகாரிகள் முழுமையான கவனம் செலுத்தி மக்களின் அசௌகரியங்களை நீக்கி முழுமையான அபிவிருத்தியை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: