அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் மக்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் தேசிய அபிவிருத்தி ஊடக மத்திய நிலையம் அங்குரார்ப்பணம்!

Wednesday, February 17th, 2021

அரசாங்கத்தின் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் மக்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக தேசிய அபிவிருத்தி ஊடக மத்திய நிலையமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஊடக அமைச்சின் தேசிய அபிவிருத்தி தொடர்பான ஊடக மத்திய நிலையத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவரர் மேலும் கூறுகையில் –

2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரை செயற்பட்ட தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் யுத்தத்தை வெற்றி கொள்வதற்காக உயர் பங்களிப்பை வழங்கியிருந்தது. இதன் மூலம் தேசிய மற்றும் சர்வதேச சமூகத்திற்கு சரியான தகவல்களை வழங்குவதற்காக வாய்ப்பு கிடைத்ததாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாட்டின் சகல பிரஜைகளுக்கும் தடுப்பூசியை வழங்குவது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அத்துடன் கொவிட்-19 காரணத்தினால் வீழ்ச்சியடைந்த சுற்றுலாத்துறை, வெளிநாட்டு வேலை வாய்ப்பு, ஆடை உற்பத்தி போன்ற துறைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்கள் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இடம்பெறுகின்றன.

அந்தவகையில் பொதுமக்களுக்கும், அரச நிர்வாகத்திற்கும் இடையிலான தொடர்பினை உயர்நிலையில் பேணும் நோக்குடன் இந்த மத்திய நிலையம் உருவாக்கப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: