அபிவிருத்திக்கே முன்னுரிமை – ஜனாதிபதி

Wednesday, August 2nd, 2017

நாட்டில் பல்வேறு வித மக்கள் பிர்ச்சினைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அப்போதிருந்த தலைவர்கள் நாட்டின் ஒரு பகுதி தொடர்பிலேயே கவனம் செலுத்தினார்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வெலிகந்த பிரதேச சபையின் புதிய இருமாடி கட்டிடத்தை திறந்துவைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

கிராமப்புற, நகர்ப்புற மக்களுக்கு உண்மையான நன்மைகள் கிடைக்கும், அவர்களது நாளாந்த வாழ்க்கையில் முகம்கொடுக்கும் அழுத்தங்கள் குறைந்து நிவாரணம் கிடைக்கும் அபிவிருத்தி திட்டங்களுக்கே தற்போதைய அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பொது மக்களுக்கு பணியாற்றும் நிறுவனங்களின் வசதிகளை அதிகரிப்பதன் ஊடாக மிகவும் திருப்தியான மனதுடன் மக்கள் சேவையை உரியவாறு நிறைவேற்ற வாய்ப்பு கிடைக்குமென தெரிவித்த ஜனாதிபதி, அது ஒரு போதும் அரசியலை நோக்காக கொண்ட அபிவிருத்தி திட்டங்கள் அல்ல எனவும் தெரிவித்தார்.

வெலிகந்த பிரதேசத்தில் இள வயது திருமணம், இள வயது கருத்தரித்தல் மற்றும் மது பாவனை அதிகரித்திருப்பதாக சமூக கணிப்பீட்டு அறிக்கைகள் மூலம் தெரியவருவதாகவும், பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு சவாலான அந்த தீய நிலையிலிருந்து மாற்றுவதற்காக எதிர்வரும் நாட்களில் விசேட திட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.


கலை இலக்கிய படைப்புக்கள் உயிர்ப்புடன் செயற்பட உதவுங்கள் - ஈ.பி.டி.பியிடம் கலைஞர்கள் கோரிக்கை!
மண் சரிவு: பல வீடுகள் சேதம்- 8 பேர் பலி!
யாழ். போதனா வைத்தியசாலைக்கு மிக விரைவில் எம்.ஆர்.ஐ. ஸ்கானர்!
பிரபல சட்டத்தரணி செலஸ்ரின் ஸ்ரனிஸ்லஸ் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் இணைவு!
தென்னை பயிர்ச் செய்கைக்கு பசளை பயன்படுத்துவதில்லை - உற்பத்திக் குறைவுக்கு இதுவும் காரணம் என்கிறது தெ...