அபிவிருத்திக்கு அதிகாரிகள் சிலரால் தடை – யாழ்ப்பாண மாவட்டச் செயலர் நா.வேதநாயகன்!

Wednesday, September 20th, 2017

யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதில் சில திணைக்கள அதிகாரிகள் தடையாக உள்ளனர் என்றும் அவ்வாறான அதிகாரிகள் மீது பாராபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  யாழ்ப்பாண மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது –

யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களை நாம் முழு வீச்சில் நடைமுறைப்படுத்தி வருகின்றோம். எமது மாவட்டத்தின் திட்டங்கள் காலதாமதமாவதற்கு இங்குள்ள சில திணைக்களங்களின் அதிகாரிகளும் முக்கிய காரணமாக இருக்கின்றனர்.

சில திணைக்களங்களின் அதிகாரிகள் அபிவிருத்தித் திட்டங்களின் போது அவர்களுடைய வேலைத் திட்டங்களின் வவுச்சர்களை வேண்டுமென்றே காலதாமதமா க்குகின்றனர்.  இங்குள்ள சில தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் எமது அபிவிருத்தித் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதில்லை.

அவர்களில் பலர் இனங் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு விஷமத்தனமான செயற்பாடுகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகள் மீது பாராபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும். எமக்கு எமது மாவட்டத்தின் அபிவிருத்தியே முக்கியமாகும்.

எமது திட்டங்களைக் கையகப்படுத்தச் சிறந்த ஒப்பந்தகாரர்கள் இல்லாமையயாலும் அவை காலதாமதமாகின்றன. எது எப்படி இருப்பினும் நாம் எமது மாவட்டத்துக்கான நடப்பாண்டுத் திட்டங்களை குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் நிறைவேற்ற முழு முயற்சிகளை எடுத்து செயற்பட்டு வருகின்றோம்- என்றார்.

Related posts: