அபாய வலயங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது சாத்தியமாகுமா? – வைத்திய நிபுணர்கள்!

Saturday, April 11th, 2020

கொரோனா தொற்று பரவல் இனங்காணப்பட்டதை அடுத்து அபாய வலயங்கள் என அறிவிக்கப்பட்ட வலயங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்த முடியும் என இலங்கை சமூக வைத்திய நிபுணர்கள் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையிலும் நாட்டினை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கும் இலங்கை சமூக வைத்திய நிபுணர்கள் சங்கம் 12 யோசனைகளை முன்வைத்துள்ளது.

அபாய வலயங்கள் தொடர்பாக ஆய்வு செய்து, ஏனைய பிரதேசங்களில் ஊரடங்கு சட்டத்தை இலகுபடுத்துவது ஏற்புடையது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ நிலையங்கள், மருந்தகங்கள், பல்பொருள் அங்காடி ஆகியவற்றை திறப்பது சிறந்தது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், இதனை நடைமுறைப்படுத்தும் போது சமூக இடைவெளியைப் பேணுவது முக்கியமானது எனவும் சமூக வைத்திய நிபுணர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆசனங்களில் 50 வீதத்திற்கு மக்களை வரையறுத்து போக்குவரத்து வசதிகளை மேற்கொள்வது தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts:

காணாமற்போனவர்கள் தொடர்பில் இறப்பு பதிவுசெய்யும் கால எல்லை நீடிப்பு – முல்லைத்தீவு மாவட்ட காணிப்பதிவா...
யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 10 மாத குழந்தை உயிரிழப்பு !
பயங்கரவாத தடைச் சட்டத்தை கொண்டு வருவது தொடர்பில் அமைச்சர் ஜி.எல். பீரிஸ், வெளிநாட்டு இராஜதந்திரிகளுக...