அபாய கட்டத்தில் நாடு: மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் அவசர கடிதம்!

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியலில் நெருக்கடி நிலைமைகள் குறித்து, மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரர் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அந்த கடிதத்தில் – “நாட்டின் தற்போதைய அரசியல் மோசமான நிலைமையில் சென்றுகொண்டிருக்கின்றது. எனவே, இதற்கு உரிய தீர்வை விரைவாக எடுக்கவேண்டும். தவறும் பட்சத்தில், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும். தற்போதைய நிலையில் நாடு ஒரு அபாய கட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது.
2015 ஆம் ஆண்டு, அரசாங்கம் நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். அதனை செய்யாமையின் காரணமாகவே தேர்தலில் தோல்வியை சந்திக்க நேர்ந்துள்ளது” என அந்த கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
தோழர் திலக் அவர்களின் துணைவியாருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கண்ணீர் அஞ்சலிகள்!
கொரோனா தொற்று அச்சத்தில் யாழ்ப்பாணம் : பரிசோதனைகளை விரிவுபடுத்த அதிரடி நடவடிக்கை!
5 விநாடிகள் முகக்கவசமின்றி இருப்பது ஆபத்து - மருத்துவர் சந்திம ஜீவந்தர எச்சரிக்கை!
|
|