அபாயகர பிரதேசங்களில் வசிக்கும் 12 ஆயிரம் குடும்பங்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை – துறைசார் தரப்பினருக்கு பிரதமர் பணிப்புரை!

அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் 12 ஆயிரம் குடும்பங்களை விரைவில் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறு துறைசார் தரப்பினருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் நாடாளுமன்ற குழு அறையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அதிகாரிகளுக்குப் பிரதமர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்குவது தொடர்பில் உரிய அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள பிரதமர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் ஏற்கனவே 21 மாவட்டங்களுக்குத் தலா ஒரு மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது. அதனடிப்படையில் முதற்கட்ட இழப்பீடு வழங்கும் நடவடிக்கை தாமதமின்றி நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சுமார் 15 ஆயிரம் குடும்பங்கள் அதிக அபாயம் மிகுந்த பிரதேசங்களில் நீண்டகாலமாக வசித்து வருகின்றனர். அவர்களில் இதுவரை 3 ஆயிரம் குடும்பங்கள் மாத்திரமே வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிக்கும் எஞ்சிய 12 ஆயிரம் குடும்பங்களை விரைவில் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஆபத்தான சூழ்நிலையைக் கண்டறிந்து, அதற்கேற்ப முன்னுரிமை அளித்து, அவர்களை ஆபத்திலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|