அன்று குடிநீர் , பொருளாதார மையம்!…  இன்று வீட்டுத்திட்டம் ! … மக்களை வதைக்கின்றது கூட்டமைப்பு –  தவநாதன் 

DSC_0028 Saturday, July 15th, 2017

போலித் தேசிய வாதிகள் தடுத்த எல்லாவற்றையும் யதார்த்த வாதிகள் சாத்தியமாக்கினார்கள் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளரும் வடக்கு மாகாண சபையின் உறுப்பினருமான வை.  தவநாதன் தெரிவித்துள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கம் முன்மொழிந்திருக்கும் பொருத்து வீடுகளுக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்  மேற்கொண்டுள்ள தடை உத்தரவு கோரிய வழக்கு தொடர்பாகவே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் வீடற்றவர்களுக்கு கிடைக்கவிருந்த 65 ஆயிரம் பொருத்து வீடுகளுக்கும் போலித் தேசிய வாதிகள் ஆப்பு வைத்துள்ளதாகவும் தெரிவித்த அவர் இரணைமடு குடிநீர் திட்டத்தை  தடுத்தார்கள் யாழ் வளாகத்தை வேண்டாம் என்றார்கள் வட-கிழக்கு மாகாண சபையை தொட்டுக்கூடப் பார்க்க மாட்டோம் என்றனர். தீர்வுப் பொதியை எரித்தார்கள் குடி நீரில் அரசியல் செய்தார்கள் பொருளாதார வாய்ப்புகளை திருப்பி விட்டார்கள் இன்று போலித் தேசியவாதிகள் ஓலைக் குடிசைகளில் வதைபட்டுக் கிடக்கும் மக்களுக்கு வழங்கப்படவிருந்தபொருத்து வீடுகளைக்கூட தடுத்துவிட்டார்கள் எனவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

மேலும்இவர்களால் தடுக்கப்பட்ட எல்லாமே யதார்த்தவாதிகளால் சற்றுக்காலம் பிந்தியாவது சாத்தியமானது என்பதே உண்மை எனவும் தவநாதன் தெரிவித்துள்ளார்.


இன்று உலக சுற்றாடல் தினம் !
வித்தியா கொலை வழக்கு : சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!
புதிய அரசியலமைப்பு ஐக்கியமான நாட்டை கட்டியெழுப்ப உதவும் - அமைச்சர் மங்கள சமரவீர!
யாழ்.உட்பட பல்கலைக்கழகங்களில் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்ய முடிவு!
கடந்த மூன்று மாத காலப்பகுதியில் 21 ஆயிரம் பேருக்கு டெங்கு!