அனைவரும் ஒருமித்த ஆன்மீக உணர்வோடு வழிபாடு செய்வதன் ஊடாக பல நன்மைகள் கைகூடும் – சிவராத்திரி தின வாழ்த்துச் செய்திக் குறிப்பில் பிரதமர் தெரிவிப்பு!

Tuesday, March 1st, 2022

செழிப்பானதொரு வாழ்க்கைப் பயணத்திற்கு ஆன்மீக உணர்வு அடிப்படையான ஒன்று என சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச சிவராத்திரி தினத்தில் அனைவரும் ஒருமித்த ஆன்மீக உணர்வோடு வழிபாடு செய்வதன் ஊடாக பல நன்மைகள் கைகூடும் என்பது இந்து மக்களின் நம்பிக்கையாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிவராத்திரி தினததை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்திக் குறிப்பிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தெர்டர்பில் அவர் மேலும் கூறுகையில் –

இந்து மக்கள் அனைவரதும் முழுமுதற் கடவுளான சிவபெருமானை நினைந்து விரதம் அனுட்டித்து, பக்தியோடு கொண்டாடும் மகா சிவராத்திரி எனும் புனித நன்னாளிலே, இந்த வாழ்த்துச் செய்தியினைக் கூறிக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

எல்லா மதங்களினதும் வளமான வாழ்க்கைக்கு ஆன்மீகமே அடிப்படையானது. இந்துக்கள் அனைவராலும் புனிதமாக அனுட்டிக்கப்படும் விரத தினங்களிலே, மகா சிவராத்திரி மகோன்னதமானது.

இந்நன்னாள் இந்துமக்கள் அனைவராலும் ஆன்மீக உணர்வோடு சிறப்புற அனுட்டிக்கப்படும் சுபீட்சத்துக்கான பெருநாளாகும். இந்த புனித வழிபாட்டின் ஊடாக கடவுளின் ஆன்மீக சக்தி தமக்கு கிடைக்கும் என்று இந்து மக்கள் நம்புகின்றனர்.

பல்வேறு இனத்தவர்களும் மதத்தவர்களும் இணைந்து பணியாற்றுவதன் மூலம், உங்களுக்கும் நாட்டிற்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பு கிட்டும். இலங்கைத் தாயின் மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியமானதும் சுபீட்சம் மிக்கதும் அபிலாஷைகள் எல்லாம் கைகூடும் ஒரு எதிர்காலம் அமைய இந்த சிவராத்திரி தினம் மிகவும் முக்கியமானது என்பது எனது நம்பிக்கை.

துன்பங்கள் என்ற இருள் நீங்கி இன்ப ஒளி எங்கும் பரவ வேண்டித் துதிக்கும் பக்தி மிகுந்த இந்த நாளிலே அனைவருக்கும் சௌபாக்கியமே கிடைக்க இறையருளை மனதார வேண்டித் துதிப்போம். இந்த உன்னதமான மகாசிவராத்திரி தினத்தில் இலங்கை வாழ் இந்து மக்கள் அனைவருக்கும் நலமே விளையட்டும்! நாடு நலம் பெறட்டும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு அண்மையில் மீன்பிடி இறங்கு துறை: எதிர்த்து கவனயீர்ப்புப் போராட்டம்!
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியா பயணமானார் - ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழ...
ஏற்றுமதிப் பொருளாதாரத்தை நோக்கிய துரித மாற்றத்தையே எதிர்பார்க்கிறோம் – அரச நிதி நிர்வாகத்திற்கும் பு...