அனைவரும் இலங்கைக்கு ஆதரவளிக்க முன்வரவேண்டும் – சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஸ்ட அதிகாரி கோரிக்கை!

Monday, April 10th, 2023

இலங்கை எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட செயல்திட்ட தலைவரும் அலுவலக பிரதானியுமான பீட்டர் புரூவர் தெரிவித்துள்ளார்.

காணொளி பதிவொன்றினூடாக பீட்டர் புரூவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்.

அதிகரித்த பொருளாதார நெருக்கடிகள் மற்றும் கொள்கை தவறுகளிற்கு பின்னர் இலங்கை மீளகட்டியெழுப்புவது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணயநிதியம் உதவுவதற்கே இங்கு வந்துள்ளது, இலங்கைக்கு மிகவும் தேவையான தருணத்தில் அடுத்த நான்கு வருடத்திற்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க சர்வதேசநாணயநிதியம் முன்வந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தனது வரலாற்றில் முதல் தடவையாக தனது கடனை திருப்பி செலுத்த முடியாத வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டது, இதற்கான சுலபமான தீர்வுகள் இல்லை.  இந்த பாரிய பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு அனைவரும் ஒன்றிணையவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்த நெருக்கடியிலிருந்து  மீள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும் அதேவேளை நலிவடைந்த நிலையில் உள்ள மக்களிற்கு ஆதரவளிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள சபீட்டர் புரூவர், சர்வதேச சமூகம் இலங்கையின் முயற்சிகளிற்கு ஆதரவளிக்கவேண்டும். அதன் காரணமாக இலங்கை மீண்டும் வலுவான உள்ளடக்கிய வளர்ச்சிப்பாதையில் பயணிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


அரசின் நல்லிணக்கச் செயற்பாடுகள் குறித்து புரிந்துணர்வு ஏற்பட வேண்டும் - யாழ் மாவட்ட செயலாளர் நாகலிங்...
மாகாண சபை தேர்தல் தொடர்பில் ஆராயுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு பிரதமர் அறிவுறுத்...
அதிபர் – ஆசிரியர்களின் பிரச்சினைக்கு தீர்வாக மாதாந்தம் 5 ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவு – அமைச்சரவையி...