அனைவருக்கும் இலவச மின்சார இணைப்புகளை வழங்குவதே அரசாங்கத்தின் திட்டம் – அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவிப்பு!

Monday, March 8th, 2021

ஒரு புதிய மின் திட்டத்தின் கீழ் அனைத்து இணைப்புகளையும் இலவசமாக பொதுமக்கள் அனைவருக்கும் எந்த நீடிப்புமின்றி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சூரியசக்தி, காற்று மற்றும் நீர்மின் உற்பத்தி அபிவிருத்தி அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்..

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

எந்தவொரு நீடிப்புமின்றி வழங்கக்கூடிய அனைத்து மின் இணைப்புகளையும் அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மின்சார இணைப்புகளை அமைப்பதற்கு இலங்கை மின்சார சபை 15,000 ரூபாவை அறவிடுகிறது.

எனினும் இம்மாதம் நாம் எந்த நீடிப்புமின்றி சமுர்த்தி பெறுநர்களுக்கு மின்சாரம் வழங்குவோம். இலங்கை மின்சார சபை பெரிய தொகையை அறவிடுவதாக மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இது போன்ற பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்பதே எனது ஆலோசனை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம் ஒரு இலட்சம் சமுர்த்தி பயனாளர்களின் குடும்பங்களின் வீட்டுக்கூரைகளில் சோலார் பனல்களை நிறுவும் திட்டமும் எம்மிடம் உள்ளது. கடந்த காலத்தில் எல்லா இடங்களிலும் மின்சாரம் கிடைக்காத போது அது பணமுள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியமானது.

இப்போது மின்சாரம் என்பது ஒரு சாதாரண விடயம். எனவே இயற்கையாக ஒவ்வொரு வீட்டிலும் மின்சாரம் இருப்பதை உறுதி செய்வது அரசின் கொள்கையாகும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: