அனைத்து மாவட்டங்களிலும் நீச்சல் தடாகம் அமைக்கப்படும் – அமைச்சர் தயாசிறி ஜயசேகர!

Friday, October 14th, 2016

நாட்டில் விளையாட்டை உயர்ந்த இடத்துக்கு கொண்டு வர சரியான முறையில் அத்திவாரம் இடவேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நான் சுசந்திகா ஜயசிங்கவிற்கு ஒலிம்பிக் செல்வதற்கான அணியையும் ஆசிய போட்டிகளில் பங்கேற்கும் அணியையும் மற்றும் தேசிய பயிற்சிக்குழுவையும் அமைக்குமாறு உத்தரவிட்டுள்ளேன். நாம் அவர்கள் அனைவரையும் அமைச்சின் மூலம் பார்த்துக்கொள்வோம். தாம் மிகவும் சரியான முறையில் எமது நாட்டின் விளையாட்டுத்துறையை உயர்ந்த ஸ்தானத்துக்கு கொண்டுவர அத்திவாரம் இட்டுள்ளேன் என விளையாட்டு அமைச்சர் தயாசிறி ஜயசேகர கொழும்பில் நடைபெறவுள்ள 2016ம் ஆண்டு தெற்காசிய நீர் விளையாட்டு போட்டிகள் தொடர்பாக கடந்த 11ம் திகதி விளையாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில் – நாட்டில் நீச்சல் விளையாட்டை முன்னேற்ற வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் நீச்சல் தடாகங்களை அமைத்து அனைத்து பாடசாலைகளையும் நீச்சல் போட்டிகளில் ஈடுபடும் திட்டமொன்றை தயாரித்துள்ளோம். மாகாண விளையாட்டு தொகுதியிலும் பாடசாலைகளிலும் அமைக்கப்படும் நீச்சல் தடாகங்களிலும், வெளிநாட்டு பயிற்சியாளர்களால் எமது மாணவர்களுக்கு பயிற்சியளிக்க நாம் நடவடிக்கை எடுக்கவுள்ளோம். தேசிய நீர் விளையாட்டு சங்கம் இது தொடர்பான ஆரம்ப நடவடிக்கைகளை முன்னெடுக்கும என நாம் எதிர்பார்க்கின்றோம். கிராமிய மட்டத்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது மிக முக்கியமாகும்.

போட்டித் தொடரில் 37 போட்டிகளோடு 38 வகையான நீச்சல் போட்டிகள் உள்ளது. பதக்கப்பட்டியலை அதிகப்படுத்த நீச்சல் போட்டிக்காக எமது வீர, வீராங்கனைகளை பெருமளவில் பயிற்சியளித்து வெற்றிகளைப் பெறவேண்டும்.

அதற்காக தெற்காசிய நீர் விளையாட்டுப் போட்டித் தொடர் பெரும் சக்தியாகவும் வழிகாட்டியாகவும் அமையுமென நான் நம்புகின்றேன். அனைத்து பிரதேச பிள்ளைகளையும் நீர் விளையாட்டு சங்கத்தில் இணைந்து பயிற்சி பெறுவது அழைப்பு விடுக்கின்றேன்.

புதிய விளையாட்டு வீரர்களை உருவாக்க அவர்களுக்கு சக்தி கிடைக்க வேண்டுமென பிரார்த்தனை செய்கின்றேன். 2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கு இது ஒரு நல்ல ஆரம்பமாகும்.நான் அனைத்து ஊடகங்களிடமும் இவ்வாறான சந்தர்ப்பங்களை நாட்டிற்கு அறியத் தந்து எமது பிள்ளைகளை விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்க பிரசாரம் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன். நாம் விளையாட்டமைச்சாக அனைத்து அடிப்படை வசதிகளையும் நவீன முறையில் எமது வீர, வீராங்கனைகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம். அதேபோல் அவர்களது எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் நாம் பொறுப்புக் கூறுகின்றோம்.

இந்தப் போட்டிகள் வெவ்வேறு வயது மட்டங்களில் இடம்பெறுவதுடன், மொத்தமாக 7 நாடுகளை சேர்ந்த 400 விளையாட்டு வீரர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர். இலங்கை சார்பாக 85 நீச்சல் (Swimming) வீரர்கள், 25 ‘நீரில் பாய்தல்‘ (Diving) போட்டியாளர்கள், 30 நீர்ப்பந்தாட்ட (Water polo) வீரர்கள் மற்றும் 20 திறந்த வெளி நீச்சல் (Open water swimming) வீரர்கள் உள்ளடங்கலாக மொத்தம் 160 போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இலங்கையில் இறுதியாக இடம்பெற்ற சர்வேதேச நீச்சல் போட்டியானது, 2006ஆம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு போட்டியேயாகும். எனவே 10 வருடங்களின் பின்னர் இடம்பெறவுள்ள இவ்விளையாட்டு நிகழ்வானது பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் ஆரம்பமாகவுள்ளது. இவ்வருடம் முதல் தெற்காசிய நீர்சார் விளையாட்டு சம்பியன்ஷிப் போட்டிகளை இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போட்டியின் ஆரம்ப நிகழ்வு, விளையாட்டு அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் தலைமையில் இடம்பெறவுள்ளதுடன், இறுதி நிகழ்வான திறந்த வெளி நீச்சலுடன் காலி முகத்திடலில் போட்டித்தொடர் நிறைவு பெறும்.இம்முறை அங்கர் நிவ்டேல் நிறுவனம் இப்போட்டிகளுக்கான அனுசரணை வழங்குகிறது.

11963sports-minister-daysiri

Related posts: