அனைத்து மாணவர்களும் சுகாதார வழிகாட்டுதல்களை அவசியம் பின்பற்ற வேண்டும் – பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் வலியுறுத்து!

Monday, January 10th, 2022

சுகாதார வழிகாட்டுதல்களை அனைத்து மாணவர்களும் அவசியம் பின்பற்ற வேண்டும் என பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட்டால் கற்றல் நடவடிக்கைகள் இடையூறுகள் இன்றி தொடர முடியும் என அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமைமுதல் வழமைபோன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

கொரோனா அறிகுறி தென்பட்டால் அல்லது நோயாளியின் நெருங்கிய தொடர்புடையவராக இருந்தால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்க்குமாறும் பெற்றோரிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை பாடசாலைகளில் கொரோனா தொற்று அறிகுறிகள் கண்டறியப்பட்டால் எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் உபுல் ரோஹன தெரிவித்தள்ளார்..

கொரோனா தொற்று சூழலுக்கு மத்தியில் பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்வதற்கான பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: