அனைத்து பாடசாலைகளினதும் முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு!

Friday, April 9th, 2021

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றையதினம்முதல் எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

சித்திரை புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டே விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன் பத்து நாட்களுக்கு இவ்வாறு பாடசாலைகள் மூடப்படுவதாகவும் கல்வியமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்தவகையில் பாடசாலைகளில் முதலாம் தவணைக்கான கற்றல் நடவடிக்கைகளை இன்றுடன் நிறைவு செய்து சித்திரை புத்தாண்டு பண்டிகையின் பின் எதிர்வரும் 19ஆம் திகதிமுதல் மீண்டும் பாடசாலைகளை இரண்டாம் தவணைக் கற்றல் செயற்பாடுகளுக்காக ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாடசாலைகள் மீண்டும் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் போது கடுமையான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படும் என தெரிக்கப்படுவதுடன் மாணவர்களை குழுக்களாக பாடசாலைகளுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: