அனைத்து பல்கலைக் கழகங்களையும் திறப்பது ஆராய்வு – பல்கலை மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவிப்பு!
Wednesday, March 17th, 2021கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக் கழகங்களையும் மீளவும் திறப்பது குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாடு கொரோனா தொற்றின் பாதிப்பிலிருந்து ஓரளவு மீண்டுள்ள நிலையில் பல்கலைக் கழகங்களை திறப்பது தொடர்பில், சுகாதார அமைச்சுடன் தற்போது பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுவதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது பல்கலைக் கழகங்களில், பரீட்சை நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சந்தர்ப்பவாத தலைமைகளை விரட்டியடிக்க ஒற்றுமையுடன் முன்வாருங்கள் - தோழர் மாட்டின் ஜெயா தெரிவிப்பு!
கொரோனா வைரஸ்: முதலாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டார் - அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!
இலங்கை வந்த உலக வங்கிக் குழு, இன்று யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம்!
|
|