அனைத்து பல்கலைகழகங்களும் நாளைமுதல் மீள திறக்கப்படும் – பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
Sunday, August 16th, 2020நாட்டிலுள்ள அனைத்து பல்கலைகழகங்களையும் நாளைமுதல் மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம்முதல் அனைத்து பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டது. பின்னர் பரீட்சைகளின் நிமித்தம் பல்கலைக்கழகங்கள், கட்டம் கட்டமாக திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சகல பல்கலைகழகங்களையும் நாளைமுதல் மீள திறப்பதற்கு பல்கலைகழக மானியங்கள் அறிவித்துள்ளது.
மேலும் சுகாதார பரிந்துரைகளை பின்பற்றி குறித்த கல்வி நடவடிக்கைகள் மீள முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் பதிவு செய்யப்படாத மாணவர்கள், பல்கலைகழங்களுக்கு செல்லுவதற்கு தொடர்ந்தும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|