அனைத்து பரீட்சைத் திணைக்கள பிரசுரங்கள்களும் டிஜிட்டல் முறையில் – பரீட்சைத் திணைக்களம்!

பரீட்சைத் திணைக்களத்தால் நடத்தப்படும் அனைத்துப் பரீட்சைகள் தொடர்பான அச்சக மற்றும் பிரசுர நடவடிக்கைகளையும் நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் மேற்கொள்வதற்கு அரசு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் பரீட்சைகள் சம்பந்தப்பட்ட வினாத்தாள்கள், பெறுபேறுகள் மற்றும் பரீட்சைகள் இரகசியமாகப் பாதுகாக்கப்படும் தகவல்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவை பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்படுவதற்கு முன்னரே மோசடியான முறையில் குறிப்பிட்ட சில தரப்புகளால் பெறப்பட்டுள்ள நிலையில் பரீட்சைகள் சம்பந்தப்பட்ட இரகசியங்களைப் பேணுவதில் உச்ச பாதுகாப்பை வழங்கும் நோக்கத்துடன் பரீட்சைகள் சம்பந்தப்பட்ட அனைத்து அச்சக மற்றும் பிரசுர நடவடிக்கைகளையும் நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் மேற்கொள்ள அரசு தீர்மானித்துள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைத் திணைக்களம் வருடாந்தம் 270 பல்வேறுபட்ட பரீட்சைகளை நடத்தி வருவதுடன் அவற்றுக்கான அனைத்துப் பிரசுரங்களும் கடந்த 30 வருடங்களுக்கு முன்னிருந்து இன்றுவரை பழைய அச்சிடுதல் முறைகளிலேயே அச்சிட்டு வெளியிடப்படுகின்றன. இவ்வாறு மிகப் பழைமை வாய்ந்த அச்சிடும் முறையை முடிவுக்குக் கொண்டு வந்து நவீன டிஜிட்டல் அச்சிடுதல் முறையை ஏற்படுத்துவதும் அரசின் நோக்கம் எனவும் இவ்வாறு பிரசுரங்கள் பற்றிய இரகசியங்களின் பாதுகாப்பு மற்றும் நவீனத்துவம் ஆகிய நோக்கங்களுடனேயே அரசு பரீட்சைத் திணைக்களத்தின் அனைத்து அச்சிடுதல் நடவடிக்கைகளையும் டிஜிட்டல் மயப்படுத்த தீர்மானித்துள்ளது.
Related posts:
|
|