அனைத்து நீதிமன்ற கட்டமைப்பையும் டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து!

Friday, February 12th, 2021

நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்ற கட்டமைப்பையும் டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான உடன்படிக்கை ஒன்று நேற்றையதினம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அத்துடன் நீதிமன்ற கட்டமைப்பில் ஆவணங்களை பராமரித்தல், முகாமைத்துவம், வழக்குகள் குறித்த அறிக்கைகளை வைத்திருத்தல், விநியோகத்தில் உள்ளிட்ட அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளும் இதன் மூலம் டிஜிட்டல் மயப்படுத்தப்படவுள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டம் நீதியமைச்சு, நீதிச்சேவைகள் ஆணைக்குழு, தொழில்நுட்ப அமைச்சு என்பன இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பிரதிநிதிகளுடன் இணைந்து செயற்படுத்தப்படவுள்ளதாகவும் நீதி அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: