அனைத்து நிர்மாணப் பணிகளும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் மேற்பார்வையில் துரிதப்படுத்தப்பட வேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்து!

நாடு முழுவதும் உள்ள கிராமப்புற தோட்டங்களை அண்மித்த சிறிய உள்நுழைவு வீதிகள் மற்றும் சிறிய வீதிகளை இணைக்கும் வகையில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் – கிராமப்புறங்களில் உள்ள அனைத்து பாலங்கள் குறித்தும் முறையாக கண்காணித்து அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறான அபிவிருத்திச் செயற்பாடுகளில் ஒப்பந்தக்காரர்கள் உரிய முறையில் செயற்படாவிட்டால், அவர்களை விடுத்து பொருத்தமான நிறுவனங்களிடம் அவற்றை ஒப்படைக்குமாறும் துறைசார் தரப்பினருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் அனைத்து நிர்மாணப் பணிகளும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் மேற்பார்வையில் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சீ.வீ.கே . சிவஞானம் ஒரு சந்தர்ப்பவாதி - கஜேந்திரகுமார் கடும் சாடல்!
உன்னிப்பாக கவனிக்கும் கஃபே அமைப்பு!
கொரோனா வைரஸ்: சந்தேகிக்கப்பட்ட 311 இலங்கையர் தொடர்பில் வெளியான தகவல்!
|
|