அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், சபாநாயகர் நன்றி தெரிவிப்பு!
Saturday, December 11th, 2021வரவு செலவுத் திட்ட விவாதத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நன்றி தெரிவித்துள்ளார்.
2022 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான 3வது வாசிப்பு நேற்று (10) மாலை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சபாநாயகர் சபைநடவடிக்கைகளை நிறைவு செய்து இதனை தெரிவித்தார்.
இதேவேளை ,2022 வரவு செலவுத் திட்டம் மீதான 3வது வாசிப்பு 93 மேலதிக வாக்குகளினால் நேற்று நிறைவேற்றப்பட்டது. வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 157 வாக்குகளும், எதிராக 64 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி வரவு செலவுத்திட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ, ஜோன் செனவிரத்ன குமார வெல்கம ஆகியோர் வாக்களிப்பின் போது சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம் றிசாட் பதியுதீன் ஆகியோர் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்த போதும் அவர்கள் தலைமை வகிக்கும் கட்சியின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|