அனைத்து தேசிய பாடசாலை ஆசிரியர்களும் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தமது நிரந்தர பணியிடத்தில் கடமையாற்ற வேண்டும் – கல்வியமைச்சின் அறிவிப்பு!

Friday, June 25th, 2021

கொரோனா தொற்றால் தங்களது நிரந்தர பணியிடத்திலிருந்து, தற்காலிகமாக வேறொரு பாடசாலைக்கு இணைக்கப்பட்டு, குறித்த காலப்பகுதியை நிறைவுசெய்த அனைத்து தேசிய பாடசாலை ஆசிரியர்களும் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தமது நிரந்தர பணியிடத்தில் கடமையாற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கான அறிவித்தலொன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவினால் வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மீண்டும் இணைப்புக் காலத்தை நீடிக்க விரும்பினால், பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தமது நிரந்தர பணியிடத்திலிருந்து அதிபரின் பரிந்துரையுடன் மீள விண்ணப்பத்தை முன்வைக்க முடியும் எனவும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்பதாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக நாடு முடக்கப்பட்டிருந்தது. அத்துடன் பாடசாலைகள் முழுமையாக இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக கல்வி நடவடிக்கைகள் இணையவழி மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தற்போது நாடு மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் கல்லி அமைச்சு குறித்த அறிவித்தைலை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

கொரோனா பரவலின் தன்மையை இலங்கையர்கள் மறந்திருப்பதானது மிகவும் ஆபத்தானது -இராணுவ தளபதி எச்சரிக்கை!
தேசிய முன்னுரிமைத் திட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வெளியானது மற்றுமொரு விசேட வர்த்தமானி...
21 ஆம் திகதிமுதல் மாங்குளம் புகையிரத நிலையத்தில் கடுகதி புகையிரதங்கள் உட்பட்ட அனைத்து புகையிரதங்களும...