அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய தனித்துவமான பொருளாதார வேலைத்திட்டத்துடன் பயணத்தை ஆரம்பிக்க நடவடிக்கை!

Sunday, January 16th, 2022

இம்மாத இறுதியில் இருந்து அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய தனித்துவமான பொருளாதார வேலைத்திட்டத்துடன் பயணத்தை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த வேலைத்திட்டம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்திட்டத்தில் வீட்டுத்தோட்ட துறையில் அதிக கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக, புத்தாண்டு தொடக்கத்தில் அரசாங்கம் விரைவான அபிவிருத்திப் பயணத்தை மேற்கொள்ளும் என அரசாங்க அரசியல்வாதிகள் பலர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: