அனைத்து துறைகளிலும் நாட்டை தன்னிறைவடையச் செய்தல் வேண்டும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்து!

Thursday, December 24th, 2020

எமது நாடு குறித்த எதிர்பார்ப்புகளை கொண்டிருக்க வேண்டுமாயின் அனைத்து துறைகளிலும் நாட்டை தன்னிறைவடையச் செய்யும் வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இரத்மலானையில் அமைந்துள்ள அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில் புதிய ஹோர்மோன் மாத்திரை உற்பத்தி ஆலையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புதிய நாட்டிற்கு புதிய ஒளடதம் எனும் எண்ணக்கருவிற்கமைய அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் புதிதாக உற்பத்தி ஆரம்பிக்கப்பட்ட ஃப்ளுகோஷைலின் ஒளடத மாத்திரையை பிரதமரிடம் வழங்கி, அறிமுகப்படுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது.

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதை குறைத்தல் மற்றும் நிறுத்துவதுடன் நம் நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய அனைத்தும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியுடன் காணப்படுவதாக இதன்போது பிரதமர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: