அனைத்து திரையரங்குகளையும் நாளைமுதல் மீளத் திறப்பதற்கு அனுமதி – கலாசார அலுவல்கள் அமைச்சு அறிவிப்பு!

Friday, June 26th, 2020

நாட்டின் அனைத்து திரையரங்குகளும் நாளைமுதல் மீளவும் திறக்க அனுமதி வழங்கப்படவுள்ளதாக  கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டிலேற்பட்ட கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் சுமார் 105 நாட்களின் பின்னர் திறக்கப்படவுள்ளன.

இந்த நிலையில் சுகாதார அறிவுறுத்தல்களின் பிரகாரம் திரையரங்குகளை நடத்திச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, கலாச்சார அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரச விருது வழங்கும் விழா மற்றும் கண்காண்காட்சிகளை இந்த வருடத்தில் வழமைபோன்று நடத்துமாறு கலாசார அமைச்சு, உரிய பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ள நிலையில் இதற்கான திட்டங்கள் கலாசார அமைச்சுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபபட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள திரையரங்குகள் கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதிமுதல் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: