அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் : வடமாகாண ஆளுநர்!

Saturday, June 2nd, 2018

வடக்கில் மாணவர்கள் பொதுமக்கள் மத்தியில் போதைவஸ்துப் பாவனை மற்றும் சட்டவிரோதச் செயற்பாடுகளைத் தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அந்த மாகாணத்திலுள்ள பொலிஸ் மற்றும் பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில் சர்வமத தலைவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் படைத்தரப்பினர், கிராம சேவையாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும்மதுவரித்திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சர்வமத தலைவர்கள் ஆளுநரிடம் விடுத்த வேண்டுகோளின் பேரில் இந்த கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

மேலும் முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸார் துரித கதியில் செயற்பட்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் ஆளுநர் றெஜினோல்ட் குரே பொலிஸாரைகேட்டுக்கொண்டார்.

Related posts: