அனைத்து சவால்களையும் சிறந்த முறையில் வெற்றிகொள்வேன் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு!

Saturday, July 18th, 2020

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அதிகரித்துள்ள சவால்களை சிறந்த முறையில் வெற்றிகொள்வேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டில் அண்மைய நாட்களில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளமை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில் –

“நான் ஜனாதிபதியாக பதவியேற்ற காலப்பகுதியில் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சவால்கள் 10 மடங்குகளாக அதிகரித்துள்ளன. இந்த சவால்களையும் சிறந்த முறையில் வெற்றிக்கொள்வேன்.

இதேவேளை, எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களை உள்நாட்டு பொறியியலாளர்கள் மற்றும் நிறுவனங்களிடம் வழங்கத் தீர்மானித்துள்ளேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: