அனைத்து சர்வதேச விமான சேவை நிறுவனங்களும் இலங்கை வரத் தயார்.- அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

கொரோனா தொற்றுக்கு முன்னர் இலங்கையில் இயக்கப்பட்ட அனைத்து சர்வதேச விமான சேவை நிறுவனங்களும் அதன் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும், விமான நிலையங்கள் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்ட பின்னர் நேற்று மட்டும் 15 வணிக விமானங்கள் இயக்கப்பட்டுள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தொற்று நோய்க்கு தொற்றுநோய்க்கு முன்பு, சுமார் 35 சர்வதேச விமான நிறுவனங்கள் நமது நாட்டிற்கு விமானங்களை இயக்கியுள்ளன. இந்த விமான நிறுவனங்கள் அனைத்தும் எம்முடன் வணிக விமானங்களை மீண்டும் தொடங்க ஒப்புக் கொண்டுள்ளன. அத்துடன் நாள் ஒளன்றுக்கு சுமார் 80 விமானங்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இயக்கினோம். இவ்வாறான நிலையில் மீள இந்த நிலைக்கு சில நாள்கள் செல்லும். ஆனால் அது படிப்படியாக நடக்கும் என்றும் எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்த அமைச்சர் மேலும் ஆறு அல்லது ஏழு மாத காலத்திற்குள் சுற்றுலாப் பயணிகளின் வருகை சாதாரணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, “என்றும் தெரிவித்துள்ளார்
Related posts:
|
|