அனைத்து கட்சிகளும் இணங்கினால் உள்ளுராட்சி பழைய முறையில் தேர்தல் நடத்தலாம்!

Sunday, December 4th, 2016

 

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை  அனைத்து கட்சிகளும் இணங்கினால் பழைய தேர்தல் முறையில் நடத்த முடியும் என்று நாடாளுமன்ற அவைத்தலைவர்  தெரிவித்துள்ளார்

நாடாளுமன்றத்தில் நேற்று மக்கள் விடுதலை முன்னணி கட்சியினால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைக்குறிப்பிட்டார்.புதிய தேர்தல் சட்டம், அரசியலமைப்புக்குள் உள்வாங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் உள்ளுராட்சி தேர்தல்கள் பிற்போடப்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளமையை ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியபோதே கிரியெல்ல தமது பதிலை வழங்கினார். இந்தநிலையில் குறித்த யோசனைக்கு தாமும் உடன்படுவதாக மஹிந்த தரப்பு உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவும் தெரிவித்தார்.

laxman

Related posts: