அனைத்து அரச சேவையிலும் மாற்றம் மேற்கொள்ள தயாராகின்றார் ஜனாதிபதி – முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Sunday, August 16th, 2020

நாட்டிலுள்ள அனைத்து அரச சேவையின் கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தில் மாற்றம் மேற்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கவனம் செலுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை திட்டமிடல் சேவைகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டுக்கு பொருத்தமான வகையில் தொழிலாளர் செயலணி ஒன்றை முகாமைத்துவம் செய்ய வேண்டும் எனவும் பசில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் கல்வி மற்றும் தொழிற்பயிற்சிக்கான திட்டங்களை வகுக்கும் நோக்கில் தொழிலாளர் செயலணி காணப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் உள்கட்டமைப்பு மேம்பாட்டுடன் மட்டுமல்லாமல், ஒரு விரிவான அபிவிருத்தி செயற்பாட்டிற்காக அரச நிறுவனங்களை இணைக்கும் தரவு சேகரிப்பு மையம் அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: