அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழு அவசர அழைப்பு!
Wednesday, August 3rd, 2022நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழு முக்கிய கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சி ஹேவாவினால் இந்தக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தேர்தல் சட்ட திருத்தத்திற்காக நியமிக்கப்பட்ட குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையின் முன்மொழிவுகள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
நெல் கொள்வனவுக்கு 4.2 பில் ஒதுக்கீடு!
திரையரங்கு உரிமையாளர்களுக்கு பதில் பொலிஸ்மா அதிபரால் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!
இன்றுமுதல் ஒரு இறாத்தல் பாணின் விலை பத்து ரூபாய் குறைக்கப்பட்டது - யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு வெதுப்...
|
|