அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அரசுக்கு எச்சரிக்கை!

Tuesday, September 27th, 2016

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிக்கும் முறைமையில் குறைபாடுகள் காணப்படுவதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதற்கு தீர்வு காணுமாறு கோரி ஜனாதிபதி இல்லம் மற்றும் அலரி மாளிகை நோக்கி பேரணிகளை நடத்தவுள்ளதாக அந்த ஒன்றியம் அரசுக்கு சிவப்பு சமிஞ்சை ஒன்றினையும் முன்வைத்துள்ளது.

தற்போதுள்ள முறைமையால் தகுதியுள்ள பல மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படாதிருப்பதாகவும் இதனால் அவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளதாகவும் அந்த ஒன்றியம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

inter-university-studens-federation

Related posts: