அனுமதி பெறாத விடுமுறை?  – சம்பளத்தில் கழிக்கப்படும்   சாரதிகள் விடயத்தில் சபை  கட்டுப்பாடு!

Saturday, October 27th, 2018

யாழ்ப்பாண மாநகர சபையில் சுகாதாரம் சார்ந்த வேலையில் ஈடுபடும் சாரதிகள் அனுமதி பெறாமல் விடுப்புகள் எடுத்தால் அவர்களின் மாதாந்த சம்பளத்தில் இருந்து விடுப்புக்கான தொகையைக் கழிக்கும் நடைமுறை இறுக்கமாக கடைப்பிடிக்கப்படும் என்று மாநகர தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாண மாநகரசபையின் அமர்வு மேயர் ஆனோல்ட் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த அமர்விலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

வாகன சாரதிகள் அனுமதி இல்லாமல் விடுப்புக்களை எடுக்கின்றனர். ஒரே நாளில் சுமார் 5 பேர் வரையில் விடுப்புகளை எடுப்பதால் கழிவு அள்ளும் உழவு இயந்திரம் உட்பட ஏனைய சுகாதாரம் சார்ந்த நாளாந்த வேலைகள் தடைப்படுகின்றன.

குறைந்தளவு ஆளணி உள்ள நிலையில் இவ்வாறான விடுப்புகள் எடுப்பதால் பல இன்னல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளன. விடுப்புகளுக்கான தொகை மாதாந்தச் சம்பளத்தில் கழிக்கப்படும் செயன்முறை இருந்தாலும் அது பெரிதாக நடைமுறைக்கு வரவில்லை. இதனாலும் அவர்கள் தமது எண்ணத்துக்கு விடுப்புகளை எடுக்கின்றனர்.

சாரதி ஒருவர் வருகை தராவிட்டால் அந்த நாளுக்கான வேலைகள் தடைப்படும். அனுமதிபெற்று விடுப்புகளை எடுத்தால் அந்தத் தினத்தில் வேறு ஒருவரைப் பதில் கடமைக்கு நியமிக்க முடியும். இதனால் அந்த நாளுக்கான வேலையும் நடைபெறும். ஆகவே அனுமதி பெறாமல் விடுப்பு எடுப்பவர்களின் நாளாந்தத் தொகை மாதாந்த சம்பளத்தில் இருந்து கழிக்கப்படும் நடைமுறை இறுக்கமாக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: