அனுமதி பத்திரங்களை தவறான முறையில் பயன்படுத்தினால் கடும் நடவடிகை – பொலிஸார் எச்சரிக்கை !

Saturday, April 18th, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடளாவிய ரீதியில் தற்போது ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே வர வேண்டிய சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் சிலர் இந்த அனுமதி பத்திரங்களை தவறாக உபயோகித்து வருவதாக தெரியவருகிறது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஊரடங்கு உத்தரவு காலத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள அனுமதி பத்திரங்களை தவறான முறையில் பயன்படுத்தும் நபர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அனுமதி பத்திரங்களை தவறாக பயன்படுத்தி எவராவது சிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பிரிவின் செய்தித் தொடர்பாளர் ஜாலிய சேனாரத்ன அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: