அனுமதி கிடைத்தவுடன் அச்சுப் பணிகளுக்கான நிதி வழங்கப்படும் – நிதியமைச்சின் செயலாளர் கடிதம்!

Sunday, March 19th, 2023

நிதியமைச்சின் அனுமதி கிடைத்தவுடன் அச்சுப் பணிகளுக்கு அவசியமான நிதியை வழங்குவதாக தெரிவித்து நிதியமைச்சின் செயலாளரினால் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பான அச்சு நடவடிக்கைகளுக்கு அவசியமான நிதியை கோரி முன்னதாக நிதியமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டதாக அரச அச்சகர் கங்காணி லியனகே தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கான அச்சு பணிகளுக்கு 500 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் 200 மில்லியன் ரூபா முதற்கட்ட தேவைகளுக்காக கோரப்பட்டுள்ளதாக அரச அச்சகர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தேர்தலுக்கான அச்சுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் அதற்காக தற்போது 200 மில்லியன் ரூபா அவசியமாகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அதற்காக 40 மில்லியன் ரூபா மாத்திரமே கிடைக்கப்பெற்றுள்ளதாக அரச அச்சகர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தேர்தலுக்கான அச்சுப் பணிகளும் தற்போது இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது

Related posts: