அனுமதி கிடைக்குமானால் அடுத்த12 மணித்தியாலங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்க தயார் – இராஜாங்க அமைச்சர் டீ.வீ.சானக தெரிவிப்பு!

சுகாதார பரிந்துரைகள் கிடைத்தால் அடுத்த 12 மணித்தியாலங்களில் அனைத்து விமான நிலையங்களையும் பயணிகள் செயற்பாட்டுக்காக திறக்க தயாராக இருப்பதாக இராஜாங்க அமைச்சர் டீ.வீ.சானக தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டிலுள்ள சுகாதார வசதி மற்றும் எங்களால் ஏற்றுக் கொள்ளக்கூடிய நோயாளிகளின் அளவுக்கு அமைய விமான நிலையத்தை திறப்பதற்கு தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விமான நிலையத்துடன் தொடர்புடைய மற்றுமொரு பிரதான விடயமாக சுற்றுலா துறையாகும். அது முழுமையாக தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு சுற்றுலா பயணிகளை மாத்திரம் வைத்து சுற்றுலா துறையை நடத்தி செல்வதற்கு சிரமம். அதற்காக அரசாங்கத்தின் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய முறையாக சுற்றுலா பயணிகளுக்கு நாட்டை திறக்க எதிர்பார்க்கப்படுகின்றது. சில நேரங்களில் அது சிறிய குழுவாக அல்லது தனி நபர்களுக்காக திறக்கப்படலாம்.
சுகாதார பரிந்துரை மற்றும் உரிய தரப்பின் பரிந்துரைகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|