அனுமதி இன்றி கட்டப்பட்டும் கட்டிடங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்படவேண்டும் – வேலணை பிரதேச சபை தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!

Friday, December 28th, 2018

பிரதேசசபை அனுமதி இன்றி கட்டப்பட்டும் கட்டிடங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்படவேண்டும் இல்லையேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வேலணை பிரதேசசபையின் தவிசாளர் ந.கருணாகரகுருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வேலணை பிரதச  சரபையின் விசேட கூட்டம் நேற்றையதினம் சபையின் தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் குறித்த பிரதேச நிர்வாக செயலாளருமான கருணாகரகுருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

குறித்த கூட்டத்தில் பிரதேசத்தின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டன. இதன்போதே தவிசாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

எமது பிரதேச ஆளுகைக்கள் பல கட்டடங்கள் தற்போது அமைக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில் இவ்வாறான கட்டடங்கள் அமைப்பது சபையின் வரையறையை மீறிய செயற்பாடாகவே அமைகின்றது.

எனவே நேற்றுமுதல்(27) குறித்த சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி அமைக்கப்படும் அனைத்து கட்டட வேலைப்பாடுகளும் இடைநிறுத்தப்பட வேண்டும். இல்லாதுவிடத்து அவை தொடர்பில் உரியவர்களுக்க எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

122

Related posts: