அனுமதி அட்டைகள் கிடைக்காதவர்கள் முறையிடவும்!

Monday, July 25th, 2016

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள தரம் 5 புலமைபரிசில் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்கள் மாணவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இதுவரை அனுமதிப்பத்திரங்கள் கிடைக்காத மாணவர்கள், இது தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

குறித்த அனுதிப்பத்திரங்கள், இம்மாதம் 18ஆம் திகதி பாடசாலை அதிபர்களுக்கு தபாலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என.ஜே.புஷ்பக்குமார தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 29ஆம் திகதிக்குள் பரீட்சை சுட்டெண் குறிப்பிடப்பட்ட அனுமதிப்பத்திரங்கள் வந்துசேராத பாடசாலை அதிபர்கள் அது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்துக்கு அறிவிக்க வேண்டும் எனனும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலதிக விவரங்கள் தேவைப்படுவோர் 011 2784208, 0112784537, 0113140314 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அல்லது 1911 எனும் இலக்கத்துக்கு தொடர்பு கொள்ள முடியும்.

அத்துடன், 0112784422 எனும் பக்ஸ் இலக்கத்துக்கு தொடர்பு கொண்டுத் விவரங்களை அறியலாம் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts: