அனுமதியின்றி தென்னை மரங்களை வெட்டத் தடை – வெளிவந்தது அதிவிசேட வர்த்தமானி!

Sunday, June 20th, 2021

தென்னை மரங்களை வெட்டுவதாயின் இனிவரும் நாட்களில் கிராம சேவகர் அல்லது பிரதேச செயலகரிடம் அனுமதி பெற வேண்டும் என தெரிவித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

தென்னை மரங்களை வெட்டும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் சட்டத்தின் கீழ் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதேவேளை பலா, பனை, தல் போன்ற மரங்களை வெட்டுவதற்கு இதுவரை விதிக்கப்பட்ட தடை வரிசையில் தென்னை மரமும் இணைக்கப்பட்டுள்ளது.

அனுமதி இன்றி தென்னை மரம் வெட்டுவதை தடை செய்யும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: