அனுமதிப்பத்திரம் பெறாத வாகனங்களின் பதிவுகள் இரத்து!
Saturday, May 5th, 2018
தொடர்ச்சியாக 5 வருடங்களுக்கு வருமான அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளாத வாகனங்களின் பதிவுகள் இரத்துச் செய்யப்படவுள்ளதாக வடமாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் பிரதேச செயலகங்களுக்கு சுற்றுநிருபம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மோட்டார் போக்குவரத்து ஆணையர் நாயகத்தின் 2018.03.15 கடிதம் சார்பாக 2017.12.31 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக 5 வருடங்களுக்கு வருடாந்த வருமான அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொள்ளாத வாகனங்களாக கருதி அது தொடர்பான ஆவணங்களை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் வடமாகாண சபையின் கீழ் 2017.12.31 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக 5 வருடகாலம் வாகன வருமானவரிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளாத வாகனங்கள் தொடர்பான விபரங்களை அனுப்பி வைக்குமாறு வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம் கோரியுள்ளது.
Related posts:
பால் மாவின் விலைகள் உடனடியாக அதிகரிக்கப்படாது- கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு!
ஓய்வூதிய திட்டத்துக்குள் உள்வாங்கப்படாத தனியார் துறையினருக்காக சமூக பாதுகாப்பு நிதியம் - தொழில் அமைச...
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாதிருக்க நடவடிக்கை - அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
|
|