அனவருக்கும் இலங்கையர் என்ற எண்ணம் வேண்டும் – அமைச்சர் சுவாமிநாதன்!

நாட்டிலுள்ள அனைத்து மக்களது மனங்களிலும் இலங்கையர்கள் என்ற எண்ணப்பாடு தோற்றம்பெற்றாலே பல பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி கிடைக்கும் இதற்காக பாரத மண்ணிலிருந்து நாம் படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு சாந்த கிளேயர் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற வாணிவிழா நிகழ்வில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
முதலில் நவராத்திரி விழாவின் இறுதி நாள் நிகழ்வை மூவின மாணவர்களும் இணைந்து கொண்டாடுவதை இட்டு மகிழ்ச்சி அடைகின்றேன். இந்த மண்டபத்தில் தமிழ் சிங்கள. முஸ்லிம் என்ன பேதமின்றி அனைவரும் ஒன்றாக இருக்கின்றீர்கள். எதிர்காலத்தில் நீங்களே இந்த சமுதாயத்தில் முக்கிய பதவிகளை வகிக்க போகின்றவர்கள். தலைமை தாங்கப்போகின்றவர்கள். ஆகவே உங்களிடையே ஒற்றுமை மிகவும் அவசியமானது.
அதேநேரம் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் நவீனத்துவ மாற்றங்களை கருத்திற்கொண்டு கற்றல் செயற்பாடுகளில் அதிக அக்கறை கொள்ளவேண்டியுள்ளது. எமது நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் சக்திகளாக காணப்படும் உங்களின் கல்வித்தரம் உயர்ந்ததாக காணப்படவேண்டும். அதற்கு எமது அரசாங்கம் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது.
இதேநேரம் தற்போது பரத மண்ணில் பல மொழிகள், மதங்கள், இனங்கள் காணப்பட்டாலும் ஒரு சமயத்தை இனத்தை, மொழியை மதிக்கின்ற பண்பு அங்கு காணப்படுகின்றது. அதேநேரம் அவர்கள் தனிப்பட்ட ரீதியில் எவ்வாறான இன, மத, மொழியை சார்ந்திருந்தாலும் இந்தியன் என்றே தம்மை அடையாளப்படுத்துகின்றார்கள்.
பாரத நாட்டிலே அத்தகைய நிலைமையை ஏற்படுத்த முடியுமென்றால் சிறிய தீவான இலங்கையில் ஏன் அத்தகைய நிலைமையை ஏற்படுத்த முடியாது. பார மண்ணிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினைகள் ஏராளமுள்ளன. நாம் ஒருவரையொருவர் மதிக்க வேண்டும். அனைவரும் இலங்கையர்கள் என்ற எண்ணப்பாட்டை ஏற்படுத்த வேண்டும்.அவ்வாறான எண்ணப்பாட்டு ஒருமித்து எட்டப்படுமாயின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுவிடமுடியும் என்றார்.
Related posts:
|
|