அனலைதீவு பிரதேச வீதிகள் விரைவில் புனரமைக்கப்படும் – ஊர்காவற்றுறை பிரதேச தவிசாளர் ஜெயகாந்தன் தெரிவிப்பு!

Saturday, February 9th, 2019

ஜப்பான் அரசின் “றெடிப்” திட்டத்தின் கீழ் ஊர்காவற்றுறை பிரதேச சபைக்குட்பட்ட அனலைதீவு பிரதேசத்தின் வீதிகள் விரைவில் புனரமைக்கப்படவுள்ளதாக தவிசாளர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

அனலைதீவு பகுதியில் காணப்படும் வீதிகள் பல சீரமைக்கப்படாமையால் மக்கனின் பாவனைக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தி வருகின்றன.  இந்நிலையில் குறித்த “றெடிப்” திட்டத்தின் பிரகாரம் கூட்டுறவுச் சங்க வீதி, வெளிச்சவீட்டு வீதி, வடக்குளம் வீதி, மேற்குக் கடற்கரை இணைப்பு வீதி, ஆச்சி கோயில் பின் வீதி மற்றும் குடிநீர் கிணற்று வீதி ஆகிய ஆறு வீதிகள் கொங்கிறீற் வீதிகளாக புனரமைக்கப்படவுள்ளாதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.