அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள எச்சரிக்கை

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மலைப்பாங்கான பகுதிகளுக்கு அருகில் வாழும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த பிரதேசங்களில் அதிக மழைவீழ்ச்சியுடனான காலநிலை நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக மண்சரிவு அபாயம் குறித்து மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, புத்தளம் முதல் கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான ஆழ்கடல் பகுதிகள் மற்றும் ஆழமற்ற கடற் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோமீற்றர்வரை அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
காலநிலை அவதான நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது இது குறித்து, கடற்றொழிலாளர்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அந்த நிலையம் அறிவுறுத்தியுள்ளது
அத்துடன், நாட்டின் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் 50 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகலாம் என்றும் காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
|
|