அனர்த்த நிவாரணம் குறித்து ஆராயந்த ஜனாதிபதி!

Tuesday, May 30th, 2017

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இரத்தினபுரி மாவட்ட மக்களுக்கான நிவாரண பணிகள் மற்றும் அங்கு முன்னெடுக்கபடவுள்ள எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரத்தினபுரி மாவட்ட செலகத்திற்கு சென்றுள்ளார்.

இதன் போது , ஜனாதிபதி பாதிக்கப்பட்ட மக்களுக்கான முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் குறித்த துறைகள் சார்பில் தனித்தனியாக அவதானம் செலுத்தியதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண திட்டமிடல்களில் மேற்கொள்ளக்கூடிய அதிகபட்ச நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி இதன் போது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்

Related posts: