அனர்த்த நிவாரணமாக வழங்கப்படும் ஐயாயிரம் ரூபாய் நிதியுதவி குறித்து பல முறைப்பாடுகள் – உன்னிப்பாக அவதானிக்கின்றது கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவிப்பு!

Tuesday, May 19th, 2020

இலங்கை அரசாங்கத்தின் நிவாரணம் வழங்கும் திட்டத்தினை கணக்காய்வாளர் தலைமை அதிபதி திணைக்களம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றது என பிரதி கணக்காய்வாளர் நாயகம் லலித் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமக வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களிற்கு அரசாங்கம் வழங்கும் 5000 ரூபாய் விநியோகிக்கப்படும் விதத்தினை அவதானித்து வருகின்றோம் என தெரிவித்துள்ள பிரதி கணக்காய்வாளர் நாயகம் இது தொடர்பில் பல முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பயனாளர்களை தெரிவு செய்யும்போது பல முறைகேடுகள் இடம்பெற்றதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

கிராம மட்டத்தில் கிடைக்கப்பெற்ற தகவல்களை அடிப்படையாக வைத்து கணக்காய்வு விசாரணை இடம்பெறும் என தெரிவித்துள்ள அவர் விரைவில் இது குறித்த ஆரம்ப கட்ட அறிக்கை வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தவர்களிற்கு உதவுவதற்காக அரசாங்கம் 5000 வழங்கும் திட்டத்தை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: