அனர்த்த நிவாரணங்களுக்கு பிரதமர் நிதியுதவி!

நாட்டிலேற்பட்டுள்ள அசாதாரண காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்கி உதவுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அலரி மாளிகையில் இன்று(26) நடைபெற்ற கூட்டமொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க நிதி ஒதுக்கீடுகளை செய்யுமாறு கூறிய பிரதமர் எவ்வித தடையும் இன்றி அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணங்களை வழங்க நிதியை வழங்குமாறு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.
Related posts:
தேர்தல் பிற்போட்டமைக்கு நாம் பொறுப்பல்ல- மஹிந்த தேஷப்பிரிய!
தனியாருக்கும் 2500 ரூபாய் வேதனம் அதிகரிக்க யோசனை!
ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் இனவாத அரசியல் தேவையில்லை - அமைச்சர் விமல் வீரவங்ச வலியுறுத்து!
|
|