அனர்த்தம் நிலவும் பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தொடர்பான அதிகாரம் அதிபர்களுக்கு!

அனர்த்தம் நிலவும் பகுதிகளில் பாடசாலைகளை நடத்துவதா இல்லையா என்ற தீர்மானிக்கும் அதிகாரம் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அனர்த்தினால் பாடசாலைக்கு ஏற்படும் அழுத்தம் மற்றும் அவதானம் என்பவற்றை கருத்தில் கொண்டு அதிபர்கள் தீர்மானங்களை மேற்கொள்ள முடியும் எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது
இதனிடையே, சீரற்ற காலநிலையால் இரத்தினபுரி மற்றும் நிவித்திகலை கல்வி வலயத்தின் சகல பாடசாலைகளும் நாளைய தினம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
சப்ரகமுவ மாகாண கல்வி பணிப்பாளர் இதனை தெரிவித்துள்ளார்ஸசீரற்ற காலநிலையால் பாதிப்புக்குள்ளான நிலையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்இதனிடையே, மேல் மற்றும் தென் மாகாணங்களில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்கு நாளை தினம் விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது அந்தந்த மாகாணங்களில் முதலமைச்சர்கள் இதனை அறிவித்துள்ளனர்.
Related posts:
|
|