அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்!

Thursday, May 24th, 2018

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நிதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்த ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படும் எனவும் தேசிய இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகளுக்காக 15ஆயிரம் ரூபா நிதி பிரதேச செயலாளர், கிராமசேவகர் ஊடாக உடனடியாக வழங்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய 85 ஆயிரம் ரூபா சம்பந்தப்பட்டவரின் மரணச்சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் இந்த தொகை இரண்டு கட்டங்களாக வழங்கப்படும் எனவும் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சமிந்த பத்திரண தெரிவித்துள்ளார்.

அனர்த்தம் ஏற்பட்ட மாவட்டங்களுக்கு தனித்தனியாக நிதி வழங்கப்பட்டுள்ளது. அனத்தத்தின் காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களுள் 4 பேர் இடிமின்னலினால் உயிரிழந்துள்ளனர். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 60 ஆயிரம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

நல்லூர் பிரதேசத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளி ஒருவருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் சக்கர நாற்கால...
ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் கூட்டம் பிரதமரின் தலைமையில் இடம்பெற்றது!
துப்பாக்கியை அபகரித்தவர்களால் வன்முறைகள் மோசமாக வாய்ப்பு - அவதானமாக இருக்குமாறு மக்களிடம் பாதுகாப்பு...