அனர்த்தங்களின் போது அழைக்க விசேட இலக்கம்!

Thursday, August 16th, 2018

அனர்த்தங்களின் போது 117 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்புகொள்ள முடியும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணம், கண்டி, மட்டக்களப்பு, கொழும்பு, பம்பலபிட்டி உள்ளிட்ட மாவட்டங்களிலும் இன்று அதிகாலையில் கடும் காற்று வீசியுள்ளதுடன் குருநாகல் மாவட்டத்தில் வீசிய கடும் காற்றினால் 187 வீடுகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
மேலும் இந்நிலை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதால் மக்களை அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே கடும் மழை காரணமாக மத்திய மலைநாட்டில் மேல்கொத்மலை, லக்சபான உள்ளிட்ட சில நீர்த்தேக்கங்களில் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

Related posts: