அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இனிதே நிறைவு!

Saturday, February 24th, 2018

இலங்கை-இந்திய கடல் எல்லைகளுக்கு இடையே அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இனிதே நிறைவுபெற்றுள்ளது.

யாழ். மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம் மற்றும் காலி மறை மாவட்ட ஆயர் றேமன் விக்கிரமதுங்க தலைமைத்துவத்தில் இன்றையதினம் காலை திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு திருவிழா புனிதமாக முன்னெடுக்கப்பட்டு நிறைவடைந்துள்ளது.

வரலாற்றில் முதன்முறையாக சிங்கள மொழியில் ஆராதனைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இம்முறை இந்தியாவிலிருந்து தேக்கு மரத்திலான புதிய கொடி மரம் கொண்டு வரப்பட்டு கொடியேற்றி வைக்கப்பட்டது.இம்முறை திருவிழாவில் இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களுக்கான குடிநீர் வசதி, தங்குமிட வசதி உள்ளிட்ட ஏனைய அனைத்து வசதிகளையும் யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம் உதவியுடன், யாழ் உள்ளுராட்சி மன்றங்களின் அனுசரனையுடன் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் பங்கேற்ற இந்திய மற்றும் இலங்கை பக்தர்களுக்கான உணவு இலங்கை கடற்படையால் நேற்றிலிருந்து வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: