அந்தமானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; இலங்கைக்கு பாதிப்பில்லை!

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் 6.5 ரிச்டெர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில் உள்ள போர்ட் பிளேயரின் தென்கிழக்கில் 310 கி.மீ (190 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
நில நடுக்கம் 40 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இலங்கையை சுற்றியுள்ள கடற்கரையை அண்மித்து வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
Related posts:
முறைப்பாடு செய்தால் விசாரணை நடத்த முடியும் - தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர்!
யாழ்ப்பாணத்தில் தனியார் வைத்தியசாலை ஒன்றின் அறுவைச்சிகிச்சை பிரிவுகளுக்கு சீல் வைப்பு!
ஐந்து மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்கள் நிர்மாணம் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
|
|